கரூர்-பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
கரூர்-பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.;
கரூர்-பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம். கரூர்-பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு தினக் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் மோகனரெங்கன் தலைமையேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படை, சாரண, சாரணீயர் படை, நாட்டு நலப்பணித் திட்ட அணியினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். ஏரோபிக்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா, தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ் கைர் நார் மற்றும் தேசிய தலைமை பயிற்சியாளர் ரோஹிணி கார்ட்கில் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். குடியரசு தின விழாச் சிறப்புரையாற்றிய பரணி கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன், “இந்தியா எல்லாத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டே செல்கிறது. இவ்வளர்ச்சி அனைத்து விதமான தொழில் துறைகளிலும் பிரதிபலிக்கிறது. இன்னும் 5 வருடங்களில் உலகின் அனைத்து முன்னனி நிறுவனங்களும் இந்தியர்கள் தலைமையில் இயங்கும் வகையில் நமக்கான வாய்ப்புகள் உலக அளவில் உருவாகிக்கொண்டு இருக்கிறது. நாளைய தலைவர்களாகிய நம் மாணவர்கள் அனைவரும் தங்கள் திறமைகளை நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் கடின உழைப்பும் தேசபக்தியையும் நமது மூலதனமாகக் கொண்டு எந்த துறையிலும் உயர்ந்த இடத்தை அடைய முடியும்” என்று கூறினார். பின்னர் தேசபக்தியை பறைசாற்றும் வகையில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரணி பார்க் முதல்வர் சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.