டிரினிடி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பின் சார்பில் 77-வது குடியரசு தின விழா அரசு பள்ளியில் கொண்டாட்டம்.

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பின் சார்பில் 77-வது குடியரசு தின விழா நாமக்கல் மாவட்டம் - மோகனூர் ஊராட்சி ஒன்றியம் - ஆரியூர் கிராமத்தில் கொண்டாடப்பட்டது.;

Update: 2026-01-26 13:51 GMT
நிகழ்ச்சியில் ஆரியூர் - நஞ்சப்பா அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை கே. ஜெயந்தி தேசிய மூவர்ண கொடியினை ஏற்றினார். நிகழ்ச்சியில் ஆரியூர் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் ஏ. கே. ராஜா கண்ணன், கல்லூரி துணை முதல்வர் ஆர். நவமணி, என். எஸ். எஸ். அலுவலர்கள் எம். சசிகலா, வீ. கோகிலா, உடற்கல்வி இயக்குநர் வீ. அர்ச்சனா, நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், மோகனூர் அரிமா & ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆரியூர், நெய்க்காரன்பட்டி, மணியங்கால்பட்டி, தோப்பூர் பகுதி பொதுமக்கள் மற்றும் நஞ்சப்பா பள்ளி மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

Similar News