முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் 77 - வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்..

முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் 77 - வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்..;

Update: 2026-01-26 15:17 GMT
இராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன் மற்றும் முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியில் 77-வது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் திரு.இரா.முத்துவேல் நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கி, தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. மருதை அவர்கள் குடியரசு தின சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டக் குழுத் தலைவர் முனைவர் எஸ். சாஹிதா, அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். இவ்விழாவில் வநேத்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்,முதல்வர் முனைவர். எஸ்.பி. விஜயகுமார், பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசனின் முதல்வர், முனைவர் ஆர்.மணி, கலைக் கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர். ஆ.ஸ்டெல்லாபேபி, அனைத்து கல்வி புலத்தின் புல முதன்மைர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், பள்ளிக் குழந்தைகள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் முனைவர். தே.ரமேஷ் மற்றும் எஸ். பாபு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News