திண்டுக்கல்லில் 8 நாட்களில் தலைமுறைவாக இருந்த 174 நீதிமன்ற பிடியானை குற்றவாளிகள் கைது - எஸ்.பி. அதிரடி நடவடிக்கை
Dindigul;
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் மேற்பார்வையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை 8 நாட்களில் கொலை, போக்சோ, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த 174 நீதிமன்ற பிடியானை குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர். மேலும் கடந்த 1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரெளடிசம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்து 26 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.