விசைத்தறி பொங்கல் போனஸ் 8.33% ஒரே நாளில் சுமுக உடன்பாடு

குமாரபாளையத்தில் விசைத்தறி பொங்கல் போனஸ் 8.33% வழங்க ஒரே நாளில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.;

Update: 2026-01-10 12:54 GMT
குமாரபாளையம் நகரில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு பொங்கல் திருவிழாவிற்காக போனஸ் கொடுப்பது வழக்கம் இதற்காக கொங்கு பவர்லூம் சங்க கட்டிடத்தில், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது. காலை 11:00 மணியளவில் நடந்த கூட்டம், உடன்பாடு ஏற்படாமல் மீண்டும் மாலை 03:00 மணிக்கு நடந்தது. இதில் கடந்த ஆண்டு வழங்கிய 8.15 சதவீதத்துடன், மேலும் 0.18 சதவீதம் சேர்த்து 8.33 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஏற்றுகொண்டனர். கொங்கு பவர்லூம் சங்கம் சார்பில் செயலர் சுந்தரராஜ், பொருளர் ராஜேந்திரன், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க செயலர் பூபதி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் அசோகன், நகர தலைவர் வெங்கடேசன், நகர செயலர் பாலுசாமி, நகர பொருளர் சக்திவேல், உதவி செயலர் மோகன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News