நாமக்கல்லில் அக்டோபர் 9 ல் இ.பி.எஸ். பிரச்சார கூட்டம் இடத்தை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி!

நாமக்கல் ஏ.எஸ். பேட்டை போதுப்பட்டி சாலை, சில்லரன்ஸ் பார்க் ஸ்கூல் எதிர்ப்புறம் உள்ள திறந்த வெளி மைதானத்தில் கூட்டம் நடத்த அ.தி.மு.க. சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. அப்பகுதியினை திங்கட்கிழமை மாலை முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்;

Update: 2025-10-06 13:24 GMT
நாமக்கல் மாநகர பகுதியில் நடைபெறவிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக தேதி மற்றும் இடம் மாற்றம் செய்யபட்டுள்ளது.கூட்டம் நடக்கும் இடத்தை முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில் அக்டோபர் 6 ல் மாலை திங்கட்கிழமை 6 மணி அளவில் முன்னாள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.பழனிச்சாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்.என்ற தலைப்பில் வாகன பிரச்சாரம் நடைபெறுவதாக இருந்தது.கரூரில் நடந்த சம்பவங்களை அடுத்து போதிய பாதுகாப்பு இல்லையென நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்ததன் பேரில், எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக மீண்டும் வருகின்ற வியாழக்கிழமை (அக்டோபர்-9 ) மாலை 4 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேடை அமைத்து பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்ததின் பேரில்,
நாமக்கல் ஏ.எஸ். பேட்டை போதுப்பட்டி சாலை, சில்லரன்ஸ் பார்க் ஸ்கூல் எதிர்ப்புறம் உள்ள திறந்த வெளி மைதானத்தில் கூட்டம் நடத்த அ.தி.மு.க. சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.அப்பகுதியினை திங்கட்கிழமை மாலை முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம்,வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர் பாலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜா,கோபிநாத், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி, துணை செயலாளர் கே.ஆர்.எம்.எஸ்.கார்த்தி, இளைஞர் பாசறை பொறுப்பாளர் மணிகண்டன், மாநகர கழக நிர்வாகிகள் வெங்கடேஷ், கண்ணன், பிரபாகரன், ரம்யா சேகர், சாலப்பாளையம் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்

Similar News