அக்டோபர் 9 இல் எடப்பாடியார் நாமக்கல் வருகை..,! முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் அழைப்பு !

நாமக்கல் மாநகரில் ஏ.எஸ். பேட்டை, போதுப்பட்டி சாலை, சில்லரன்ஸ் பார்க் ஸ்கூல் எதிர்ப்புறம் உள்ள திறந்த வெளி மைதானத்தில் அக்டோபர் 9 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கூட்டம் நடைப்பெறுகிறது.;

Update: 2025-10-07 12:08 GMT
முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி. பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாநகரில் ஏ.எஸ். பேட்டை, போதுப்பட்டி சாலை, சில்லரன்ஸ் பார்க் ஸ்கூல் எதிர்ப்புறம் உள்ள திறந்த வெளி மைதானத்தில் அக்டோபர் 9 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கூட்டம் நடைப்பெறுகிறது,கடந்த இரண்டு நாட்களாக அந்த மைதானத்தை சுத்தப்படுத்தி மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,முன்னேற்பாடு பணிகள் குறித்து அந்த இடத்திற்கு
மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்ட கழக செயலாளர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, நாமக்கல் (மா)நகர கழக செயலாளர் நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்
.மேலும் இவ்விழாவில் பங்கேற்று புதிய வரலாற்றை படைக்க நாமக்கல் முன்னாள் எம் எல் ஏ மற்றும் அதிமுக நாமக்கல் நகர செயலாளர் கே.பி.பி பாஸ்கர் அழைக்கின்றார் என அழைக்கும் அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் பாலுச்சாமி,நாமக்கல் பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம்,மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுச்சாமி மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கழக செயலாளர்கள்,பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர் கழக அனைத்து சார்பு மன்ற நிர்வாகிகள், கிளை மற்றும் வார்டு கழக செயலாளர்கள், தொண்டர்கள் அனைவரும் உடன் இருந்தனர்

Similar News