கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 காவலர்களிடம் இன்று விசாரணை.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாம் கட்டமாக விஜய் ஆஜராகும் நிலையில், கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 காவலர்களிடம் இன்று விசாரணை.;

Update: 2026-01-19 10:42 GMT
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாம் கட்டமாக விஜய் ஆஜராகும் நிலையில், கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 காவலர்களிடம் இன்று விசாரணை. கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் செயல்பட்டு வரும் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில், சிபிஐ அதிகாரிகள் கடந்த மூன்று மாதமாக பல்வேறு கட்டங்களாக விசாரணையை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் என பல்வேறு நபர்களிடமும் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஏற்கனவே விளக்கமளித்திருந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று மீண்டும் விஜய் விசாரணைக்கு ஆஜராகிறார். அதே நேரத்தில் கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நான்கு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஒன்பது காவலர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். விசாரணைக்கு ஆஜராகி உள்ள காவலர்களிடம் செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த விஜய் பிரச்சார நிகழ்வின் போது அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நேரம், இடம், கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது நிகழ்ந்தவை குறித்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் விசாரணையின் போது, சிபிஐ அதிகாரிகளால் கேள்விகளாக கேட்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News