திண்டுக்கல் அருகே கணவன் - மனைவியை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 9 பேர் கைது செய்த நிலையில் மேலும் ஒருவர் கைது
Dindigul;
திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவரை கடந்த 8-ம் தேதி R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஆரோக்கியசாமி, தர்மராஜ், சேவியர்ஆல்பர்ட், மணிகண்டன், அருள்ராஜ், ஜான்பீட்டர், மைக்கேல்ராஜ், ஞானராஜ், ராபின் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய வேடப்பட்டி, ஞானநந்தகிரி பகுதியை சேர்ந்த வெற்றி (எ) முனீஸ்வரன்(19) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்