வருவாய் துறை அலுவலர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300 பேர் கைது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்;

Update: 2026-02-10 13:49 GMT

இதில் தங்களது கோரிக்கைகளான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கிடவும் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்.பணித்தன்மை மற்றும் பணி பளுவை கருத்தில் கொண்டு அனைத்து அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடன் வழங்க வேண்டும் ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்யப்பட வேண்டும்.அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Similar News