புகழூர்-தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்.
புகழூர்-தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்.
புகழூர்-தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அமைச்சர் மதிவேந்தன் விளக்கம். கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள தளவாய் பாளையம் காலணியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம்,புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், துணை தலைவர் பிரதாபன்,புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி செயலாளர் ருக்மணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சார மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசிய அமைச்சர் மதிவேந்தன், முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் கூறியவற்றில் 90% நிறைவேற்றி விட்டார். மேலும் ,அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சொல்லாத திட்டங்களையும் செய்யும் திராவிட மாடல் அரசை நடத்தி வருவதாக தெரிவித்தார்.