கோவை செழியன் 95 வது பிறந்தநாள் விழா - கொமதேக ஈஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
காங்கேயம் அடுத்துள்ள குங்காருபாளையத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை செழியனின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு எம்.எல்.ஏ ER.ஈஸ்வரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;
கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையின் நிறுவனரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை செழியனின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான காங்கேயம் அருகே உள்ள குங்காரு பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் ஆனா ஈஸ்வரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், கோவை செழியனின் மகன் செம்பியன் சிவகுமார், மாநில துணை பொதுச்செயலாளர் சக்தி கோச் நடராஜன், மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில தலைமை நிலை செயலாளர் சுரேஷ் பொண்ணு வேல், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் கங்கா சக்திவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.வி.நிர்மல்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், காங்கேயம் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், சசிகுமார், நகர செயலாளர் சண்முகம், குண்டடம் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. ஈஸ்வரன் : தலைவர் கோவை செழியன் அவர்களுடைய 95வது பிறந்தநாள் இன்று. அவர் போட்ட அடித்தளம் மீது கட்டிடம் கட்டித் தான் நாங்கள் இன்று அரசியல் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் எல்லா முதல்வர்களுடனும் நெருக்கமாக பழகியவர், பேரறிஞர் அண்ணா முதல் கொண்டு அனைத்து முதல்வர்களும் மிக நெருக்கமாக பழகியதோடு அவர் மீது அதிகப்படியான மரியாதை வைத்திருந்தார்கள் என்றார். கொங்கு மண்டலத்தின் உடைய அரசியல் அடையாளமாக ஆரம்ப காலங்களில் திகழ்ந்தவர். கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயம் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ப்பதற்கு முழு முதல் காரணமாக இருந்தவர் என்றார். கள் இறக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை தமிழகத்திலே நீக்க வேண்டும் என தொடர்ந்து சட்டமன்றத்திலே பலமுறை நான் பேசி இருக்கின்றேன். களத்திலும் பல கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கின்றேன். விவசாயிகளும், பனையேறும் தொழிலாளர்களும் வாழ வேண்டும் என்று சொன்னால் கள் இறக்குவதற்கு அனுமதியை கொடுக்க வேண்டும். அதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் பலமுறை அதை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக அதை சாதிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார். மஞ்சள், கரும்பு, நெல் ஆகியவற்றுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும் என கடந்த முறை தேர்தல் வாக்குறுதி அழிக்கப்பட்டதற்கு என்னென்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இது குறித்து பலமுறை நான் சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏற்றிக் கொண்டுள்ளனர். இருந்தாலும் கூட தேர்தல் வாக்குறுதி சொன்ன அளவிற்கு இதுவரை விலை வராமல் இருக்கின்றது அந்த விலை வரவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டு உள்ளேன் என்றார். கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவங்கள் தேர்தல் நேரத்தில் எதிரொலிக்குமா? போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளது, பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டுள்ளது நல்ல தீர்வு வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றார். இன்று பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு? அதை நாகரிகமான அரசியலாக பார்க்கிறேன் என்றார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்.எல்.ஏ.ஈஸ்வரன் உங்களிடம் சொன்னால் வாங்கி தருவீர்களா என்று நகைச்சுவையாக தெரிவித்ததுடன் எந்தச் சூழ்நிலையில் பேச வேண்டுமோ அந்தச் சூழ்நிலையிலே கூட்டணிக்கு தலைமை ஏற்கின்ற கட்சியுடன் பேச இருக்கின்றோம் என்றார். மேலும் தினசரி ராத்திரி கூட அப்பப்போது கனவு வருகின்றது எங்கள் தலைவர் கூட ஏதாவது ஒரு மகனை சினிமாவில் நடிக்க வைத்து ஹீரோவாக ஆக்கி இருக்கலாம் அப்படி செய்திருந்தால் எங்களுக்கெல்லாம் வேலை ஈசியாக போயிருக்கும் நாட்டு நடப்பு எல்லாம் பார்க்கும் பொழுது அப்படித்தான் தெரிகின்றது அய்யய்யோ தலைவர் ஏமாந்துட்டாரே என்றும் சினிமா துறையை கையில் வைத்திருந்தவர் கோவை செழியன் ஐயா அவர்கள் எனவும் எம்ஜிஆருக்கு வாய்ப்பு கொடுத்து அவரை முன்னேற்றியவரும் கலைஞர் அவர்களுக்கும் பல வாய்ப்பை கொடுத்தவர் என்றும் என்.டி.ராமாராவுக்கு வாய்ப்பு கொடுத்தார் இப்படி எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்தவர் அவர்களுடைய இரண்டு மகன்களில் ஒருவரை படத்தில் நடிக்க வைத்து ஹீரோ ஆக்கியிருந்தார்னா நாங்களும் இப்போது மலேசியாவில் ஆடியோ ரிலீஸ் பன்னிருப்போம் அல்ல என்று கேளிக்கையாக தெரிவித்தார். தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்கு தீர்வாக திருச்செங்கோட்டில் ஒரு தென்னந்தோப்பில் வைத்து இயற்கையான மருந்தை பயன்படுத்தி அந்த பூச்சிகளை அளித்திருக்கிறோம். அது பெரிய அளவில் செய்யப்படும் என்று சொன்னால் இயற்கை முறையில் அந்த மருந்தை தயாரித்து சர்வ சாதாரணமாக எல்லா தென்னை மரத்தின் மீதும் செலுத்தி விட்டோம் என்று சொன்னால் அது அழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒரு பத்து நாட்களுக்கு முன்பாக என்ன செய்வதென்று யோசித்து அந்த இயற்கை மருந்தை தயாரிப்பவர்களை அழைத்து விவசாயிகளையும் அழைத்து சோதனை செய்துள்ளோம் என தெரிவித்தார். விஜயின் அரசியல் குறித்து? யார் வேண்டுமானாலும் அரசியல் வருவதற்கு உரிமை இருக்கின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் புதிது புதிதாக வருபவர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் 2026 தேர்தலில் என்ன நடக்கின்றது என்று தெரியும் இதுவரை பேசுகின்ற எல்லோருமே அனுமானத்தில் பேசுகின்றனர் நான் அனுமானத்தின் அடிப்படையில் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.