மதுரை சட்ட கல்லூரியில் ANTI DRUG CLUB தொடக்கம்

மதுரை சட்டக் கல்லூரியில் ANTI DRUG CLUB மன்றங்கள் தொடங்கப்பட்டது.

Update: 2024-12-11 16:16 GMT
இன்று (11.12.24) மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக மதுரை தல்லாகுளம், அரசு சட்டக்கல்லூரியில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, மாணவ-மாணவியர்களுக்கு இடையே போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் போதைக்கு பயன்படுத்தபடும் மாத்திரைகள் பற்றியும் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பழக்கம் பரவாமல் தடுக்க மாணவர்களால் காவல்துறைக்கு உதவ முடியும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழாவில் சட்டக்கல்லூரி முதல்வர் வருவாய் துறை வட்டாட்சியர் (கலால்) சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் மற்றும் சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News