குமரன் டிரேடர்ஸ், CNG பங்க திறப்பு விழா வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி தாளாளர் மற்றும் பொருளாளர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் சீராப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலான சேவையுடன் நம்பகமான பெட்ரோல் பங்காக விளங்கும் குமரன் டிரேடர்ஸ், CNG பிரிவைத் தொடங்குவதன் மூலம் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய வசதி, வாடிக்கையாளர்களுக்கு அதிக எரிபொருள் தேவைகளுக்கான தரமான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-12-29 14:15 GMT
இவ்விழாவில் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.பி.இராமசுவாமி மற்றும் பொருளாளர் சுலோச்சனா இராமசுவாமி ஆகியோர் கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் பங்க் உரிமையாளருமான முத்துவேல் மற்றும் செயல் இயக்குனர் மஞ்சு ஆகியோர் உடன் இருந்தனர்.இந்நிகழ்வில் BPCL மற்றும் IRM Energy Limited நிறுவனத்தின் விற்பனை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.