திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் உடற்தகுதி தேர்வு - DIG ஆய்வு
Dindigul;
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைகாவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை காவலர் பணியிடங்களுக்கு தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு இன்று (வியாழக்கிழமை) திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சேர்ந்த 380 பேருக்கு நடைபெற்றது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, எடை, உயரம் மற்றும் மார்பு அளவு அளத்தல், 1500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இந்த உடற்தகுதி தேர்வை திண்டுக்கல் சரக.டிஐஜி சாமிநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் ஆய்வு செய்தனர் .