திண்டுக்கல்லில் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க DSP தலைமையில் தனிப்பிரிவு துவக்கம் - 15 பேர் நியமனம்

Dindigul;

Update: 2026-02-07 02:58 GMT
தமிழக சட்டசபைத் தேர்தலில் முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு என DSP.சுபக்குமார் தலைமையில், 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 15 பேர் அடங்கிய தேர்தல் தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 2301 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல் அவற்றிற்கு துணை இராணுவம், போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வருதல், ஓட்டு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளை இப்பிரிவு போலீசார் கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News