திண்டுக்கல்லுக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து GO BACK STALIN என்று ஒட்டப்படும் போஸ்டரால் பரபரப்பு

Dindigul;

Update: 2026-01-06 17:27 GMT
திண்டுக்கல்லுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை தர உள்ளார். இந்நிலையில் பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக கொடைரோடு அம்மையநாயக்கனூர் மற்றும் திண்டுக்கல் செல்லும் வழியோர சாலைகளில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் Go BACK STALIN என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது மேலும் அந்த போஸ்டர்களில் திருப்பரங்குன்றம் தீபத்தூரில் விளக்கேற்ற தடை செய்த ஸ்டாலின் GO BACK STALIN, தமிழகத்தை போதையில் தள்ளாட வைத்த ஸ்டாலின் GO BACK, உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஸ்டாலின் GO BACK என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல்லுக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக இளைஞரணி சார்பில் அவரவர் வீடு அருகில் நின்று கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

Similar News