விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட்(WIM) 11-ம் ஆண்டு துவக்க தின விழா
வளையப்பட்டி காக்கும் கரங்கள் முதியோர் காப்பகத்தில் உணவு வழங்கல்;
கரூர் மாவட்ட SDPI-கட்சியின் மகளிர் அணியான விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட்(WIM)-ன் 11-ம் ஆண்டின் துவக்க தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது, WIM-துவக்க தினத்தை சிறப்பிக்கும் விதமாக கரூர் மாவட்டம், வலையப்பட்டியில் செயல்பட்டு வரும் காக்கும் கரங்கள் முதியோர் காப்பகத்திற்கு உணவு வழங்கப்பட்டது, கரூர் மாவட்ட தலைவர் நூரிநிஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் விஜயா மேரி, மாவட்ட பொதுச் செயலாளர் ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர், SDPI-கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர்.மார்க் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் WIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஹ்மத்நிஷா, குளித்தலை நகர ஒருங்கிணைப்பாளர் ஃபைரோஸ், SDPI-கட்சியின் மாவட்ட தலைவர் பாஷா, மாவட்ட துணை தலைவர் ஷேக் பரீத், மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ், குளித்தலை நகர பொறுப்பாளர்கள் ஹபீப், சத்ருதீன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.