வீட்டில்10 பவுன் நகை திருடியதாக ஒருவர் கைது....
வத்திராயிருப்பில் உள்ள வீட்டில்10 பவுன் நகை திருடியதாக ஒருவர் கைது போலீசார் விசாரணை ....;
வத்திராயிருப்பில் உள்ள வீட்டில்10 பவுன் நகை திருடியதாக ஒருவர் கைது.... வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் ( 41 ) என்பவர் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர்20 ஆம் தேதி மொத்தம் 10 பவுன் ரூபாய் 6,00,000 மதிப்புள்ள நகைகளை அவரது வீட்டு பீரோவில் வைத்து விட்டு பின்னர் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி காலை பால கிருஷ்ணனும் அவரது மனைவியும் பீரோவை திறந்து வைத்திருந்த நகைகளைபார்த்தபோது காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது சம்பவ நேரத்தின் போது பாலகிருஷ்ணன் வீட்டிற்குள் குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் கோபாலபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் ( 30 )என்பவர் பாலகிருஷ்ணனின் வீட்டிற்குள் வந்து சென்றதாகவும் இதனால் இவர் தான் நகைகளை திருடி இருப்பார் என தெரிய வந்ததாக கூறி வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சீனிவாசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.