136 போலி மிலிட்டரி மதுபானங்கள் பறிமுதல் ஒருவர் கைது
வெளிமாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 136 போலி மிலிட்டரி மதுபானங்கள் பறிமுதல் ஒருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் அங்குலாஸ் இரக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் மொபைல் விற்பனை கடையில் பேரலில் மறைத்து வைத்து போலி மிலிட்டரி மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு லாவண்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் சென்று மதுவிலக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வெளி மாநிலத்திலிருந்து போலியாக மிலிட்டரி மதுபானங்கள் சட்ட விரோதமாக விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு மொபைல் விற்பனை கடையில் பேரலில் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலி மிலிட்டரி மதுபானங்களை விற்பனை செய்த திண்டுக்கல் மக்கான் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது பாரூக் மகன் சேக் அப்துல்லா வயது 34 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 136 போலி மிலிட்டரி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவரை கைது செய்த காவல்துறையினர் போலி மிலிட்டரி மதுபானங்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டன என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.