ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
Update: 2024-03-11 04:45 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சட்ட நிபுணர் ராமசாமி பேசுகையில், 'கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இருக்கும் திறமை வேறு யாருக்கும் இருக்காது, அதை முறையாக பயன்படுத்த வேண்டும், கிராமத்தில் இருப்பவர்களால் முடியாது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். அரசு போட்டித் தேர்வுகளில் தன்னம்பிக்கையோடு பங்கேற்று தேர்ச்சி பெற்று உயர் பதவிகளில் அமர வேண்டும்' என்றார். தொடர்ந்து பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 18 பேர் உட்பட 462 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லுாரி நிர்வாக இயக்குனர்கள் செல்லப்பன், துரைசாமி, மணி, சந்திரசேகர், மனோபாலா, அனந்தராமன், கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.