1,548 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்!

நிகழ்வுகள்

Update: 2024-09-28 04:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் 1,548 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். ஆலங்குடி, அறந்தாங்கி பகுதியில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் பேசுகையில், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 230 மாணவிகளுக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்134 மாணவர்களுக்கும், பூவைமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58 பேருக்கும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல் கிழக்கு, அரசு மேல்நிலைப் பள்ளியில் 41 மாணவர்களுக்கும், 73 மாணவிகளுக்கும், மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவர்களுக்கும், 16 மாணவிகளுக்கும், வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 52 மாணவர்கள், 47 மாணவிகளுக்கும் அரையப்பட்டி, கொத்தமங்கலம், ஆலங்குடி ஆண்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 1548 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைமாணவ, மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். நிகழ்வுகளில்,அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன், புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News