17.50 இலட்சம் செலவில் அமைக்கப்பெற்ற உயர்கோபுர மின்விளக்குகள் திறந்து வைத்த எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன்.
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹17.50 இலட்சம் செலவில் அமைக்கப்பெற்ற உயர்கோபுர மின்விளக்குகள்;
பொரசபாளையம், மஞ்சநாய்க்கனூர், புள்ளகுமரன்பாளையம், அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி லத்துவாடி, வெள்ளாளப்பட்டி (ஆண்டாபுரம்)ஆகிய இடங்களில் நடைபெற்ற திறப்பு விழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் மாநகராட்சி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன், பேராசிரியர்கள், மருத்துவர்களுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினரும் BSNL ஆலோசனைக்குழு உறுப்பினருமான RSR.மணி, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், பொருளாளர் சசிகுமார்,அவை தலைவர் பழனிமலை , விவசாய அணி பேட்டரி மணி, நாமக்கல் சட்டமன்ற மகளிரணி செயலாளர் பிரேமலதா,நாமக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தசாமி, நாமக்கல் மத்திய ஒன்றிய செயலாளர் செல்வராசு, நாமக்கல் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவக்குமார், மோகனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், மோகனூர் நகர செயலாளர் செல்வராஜ் வனிதா, தமிழ்ச்செல்வி, செல்வி, தினேஷ், சதீஷ், சண்முகம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.