18 தாசில்தார்கள் இடமாற்றம் : ஆட்சியர் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 18 தாசில்தார்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 18 தாசில்தார்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தனி தாசில்தார் ரத்னாசங்கர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராகவும், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக அகதிகள் பிரிவு தாசில்தாராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக அகதிகள் பிரிவு தாசில்தார் சுமதி, தூத்துக்குடி உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், கயத்தார் தாசில்தார் தங்கையா, கோட்ட கலால் அலுவலராகவும், கோட்டகலால் அலுவலர் ரகுபதி, சிப்காட் வெம்பூர் நிலம் எடுப்பு தனிதாசில்தாராகவும், டாஸ்மாக் குடோன் மேலாளர் கண்ணன், வெம்பூர் சிப்காட் அலகு 1 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், அரசு கேபிள் டிவி தாசில்தார் செல்வபிரசாத், டாஸ்மாக் குடோன் மேலாளராகவும், தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் ராஜலட்சுமி, அரசு கேபிள் டிவி தாசில்தாராகவும், ஏரல் தாசில்தார் பேச்சிமுத்து, ஆதியாகுறிச்சி விண்வெளி தொழிற்பூங்கா அலகு-1 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு அலகு-6 தாசில்தார் பிரபாகரன், வெம்பூர் சிப்காட் அலகு-3 தனிதாசில்தாராகவும், நெடுஞ்சாலைப் பணிகள் நிலம் எடுப்பு தாசில்தார் சுடலை மணி, வெம்பூர் சிப்காட் அலகு 5 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலர் சாமிநாதன், திருச்செந்தூர் இஸ்ரோ அலகு-5 நிலம் எடுப்பு தனிதாசில்தாராகவும், டாஸ்மாக் உதவி மேலாளர் செல்வகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பறக்கும் படை தனிதாசில்தாராகவும், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் நிலம் எடுப்பு தாசில்தார் சுரேஷ், வெம்பூர் சிப்காட் அலகு 7 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், அல்லிகுளம் சிப்காட் அலகு 4 நிலம் எடுப்பு தாசில்தார் லட்சுமி கணேஷ், விளாத்திகுளம் அகல ரயில் பாதை அலகு 1 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், விளாத்திகுளம் அகல ரயில் பாதை அலகு 1 நிலம் எடுப்பு தாசில்தார் சேதுராமன், வெம்பூர் சிப்காட் அலகு 8 நிலம் எடுப்பு தனிதாசில்தாராகவும், விளாத்திகுளம் அகல ரயில் பாதை அலகு 2 நிலம் எடுப்பு தனிதாசில்தார் வித்யா, வெம்பூர் சிப்காட் அலகு 9 நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், விளாத்திகுளம் அகல ரெயில் பாதை அலகு 3 நிலம் எடுப்பு தாசில்தார் நாகராஜன், வெம்பூர் சிப்காட் அலகு 10 நிலம் எடுப்பு தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். இதே போன்று துணை தாசில்தார்களாக பணியாற்றி வரும் 20 பேர் தாசில்தாராக பதவி உயர்வு அளித்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டு உள்ளார்.