2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை. 2 தாத்தாக்கள் கைது

குளச்சலில்

Update: 2024-08-05 03:46 GMT
குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் உள்ள  கிராமத்தை சேர்ந்தவர் ஜான் (67) இவர் தாய் தந்தை பராமரிப்பு இல்லாத  10 வயது சிறுமியை தனது வீட்டில் வளர்த்து வந்தார். இந்த சிறுமையை மிரட்டி ஜான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து யாரிடம் சொல்ல முடியாமல் சிறுமி தவிர்த்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் முதியவரின் சிண்டுதல்களுக்கு சிறுமி எதிர்ப்பு தெரிவிக்கவே சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் ஜான் சேர்த்து விட்டார். குழந்தைகள் காப்பகத்தில்நடந்த சம்பவத்தை சொல்லி அழுதுள்ளார். உடனடியாக இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.       அதன் பேரில் விசாரணை நடத்திய அதிகாரி குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜானை கைது செய்தனர்.       இதே போன்று கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதி சேர்ந்தவர் முரளி (64) தனது ஆறு வயதான பேத்தியை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து மிட்டாய் வாங்கி தருவதாக கடைக்கு அழைத்து செல்லும்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து தாயார் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் முரளியையும் போக்சோ வழக்கில் போலீசார்  கைது செய்தனர்.

Similar News