திருப்பூரில் யோகா பயிற்சியில் ஜெர்மனை சேர்ந்த 2பெண்கள் பங்கேற்பு

திருப்பூரில் சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற யோகா தின பயிற்சியில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2024-06-21 09:52 GMT

உலக யோகா தின கொண்டாட்டம்

திருப்பூரில் சர்வதேச யோகா தின விழாவை  முன்னிட்டு  நடைபெற்ற யோகா தின பயிற்சியில்  ஜெர்மன்  நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட  1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. கை பயிற்சி,மூச்சு பயிற்சி, கண் பயிற்சி, சூரிய நமஸ்காரம், மற்றும் ஆசனங்கள், முத்திரைகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

உடல், மன, ஆன்மீகம் மற்றும் ஆன்மா அம்சங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், யோகா ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான பாதையை வழங்குகிறது, உடல் ஆரோக்யம் பெறவும், மன அமைதி பெறவும் யோகா அவசியம் என்பதன் அடிப்படையில் ,

வாழ்க்கையின் சவால்களை அமைதியுடனும், மன உறுதியுடனும் எதிர்கொள்ள உதவும் யோகக் கலையை ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மேம்படுத்திக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், இன்று  ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது,

அதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் கலையரங்கில் உலக சமுதாய சேவா சங்கம் திருப்பூர் மண்டலம்,  மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் யோகா பயிற்சி பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், யோகா செய்முறை பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில், மனவளக்கலை  ஸ்கை யோகா ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள்  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுகை பயிற்சி,மூச்சு பயிற்சி, கண் பயிற்சி, சூரிய நமஸ்காரம், மற்றும் ஆசனங்கள் முத்திரைகள் என யோகா பயிற்சி செய்தனர்.

இந்த  யோகா தினவிழா நிகழ்ச்சியில்  விரிவாக்க இணை இயக்குனர் A.V.பழனிசாமி வரவேற்புரை வழங்கினார். யோகா பயிற்சியை ஆழியாறு அறங்காவலர் VM. கந்தசாமி தொடங்கி வைத்தார்.ராம்ராஜ் காட்டன் நிறுவன நிர்வாக இயக்குனரும்  ,உலக சமுதாய சேவா சங்கம்  துணைத் தலைவருமான K.R. நாகராஜன் முன்னிலை வகித்தார்,  ஜெர்மனி நாட்டை சார்ந்த  டாக்டர். ருசிதா குருசர், ஜுட்டா பிரேயர் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உலக சமுதாய  சேவா சங்கம் துணைத் தலைவர்SKY. V சுந்தர்ராஜ்  யோகா பற்றிய விழிப்புணர்வையும், உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

Tags:    

Similar News