2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வெற்றி வாகை சூடுவோம். கரூரில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன் பேட்டி.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வெற்றி வாகை சூடுவோம். கரூரில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன் பேட்டி.;
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வெற்றி வாகை சூடுவோம். கரூரில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன் பேட்டி. தமிழ் புலிகள் கட்சியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேரறிவாளன்,மாநில அமைப்பு செயலாளர் ஆதி வீரன்,மேற்கு மண்டல பொதுச் செயலாளர் இளவேனில்,கரூர் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்ட மாநில,மாவட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த நாகை. திருவள்ளுவன், தமிழ் புலிகள் கட்சியின் 2025 ஆம் ஆண்டுக்கான மாநில பொது குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான சனாதான அரசியல் அணியை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொள்வதற்கும், சமூக நீதி கோட்பாட்டை நிலைநாட்டுவதற்காகவும் திமுக தலைமையிலான கூட்டணி ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவும், அதற்கு வலு சேர்க்கும் விதமாக வரும் பிப்ரவரி 8ஆம் தேதி கரூரில் வெல்லும் தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநாடு நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.