21 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.02 இலட்சம் மதிப்பில் கல்வி கட்டணத்தினை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் , சமூக பொறுப்பு நிதியிலிருந்து 21 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.02 இலட்சம் மதிப்பில் கல்வி கட்டணத்தினை வழங்கினார்.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் 21 மாணவ, மாணவியர்களுக்கு பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து (Corporate Social Responsibility Fund) ரூ.1.02 இலட்சத்திற்கான கல்வி கட்டண தொகையினை வழங்கினார். சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி போன்ற பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மோகனூர் அரசு பாலிடெக்னிக், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, பி.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் பயிலும் 3 மாற்றுத்திறனாளிகள் உட்பட 21 மாணவ, மாணவியர்களுக்கு சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்வி கட்டணமாக ரூ.1,01,637/-க்கான கசோலைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் மாதவியாதவ், திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கீத் குமார் ஜெயின் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.