ரூ.23 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்.
நாமக்கல் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.23 கோடி மதிப்பில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.;
அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் . திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கலந்து கொண்டு. மருத்துவமனையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களினால், ரூ.23 கோடி செலவில், தரை மற்றும் 4 தளங்கள். 300 படுக்கைகள், 64,347 சதுரடி பரப்பளவில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம். திருச்செங்கோடு அரசு மருத்துவமனை இதுவரை 160 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. புறநோயாளிகள் நாளொன்றுக்கு 700 பேர், உள்நோயாளிகள் நாளொன்றுக்கு 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாதத்திற்கு சராசரியாக 100 பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பின் முதலமைச்சர் திருச்செங்கோடு பகுதி மக்களின் நலன்கருதி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த ஆணையிட்டு, ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதனடிப்படையில் தரை மற்றும் 4 தளங்களுடன் (G+4) கூடிய கட்டிடம் 64,347 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.இக்கட்டிடத்தில் தரைத்தளத்தில், 8 படுக்கைகள் கொண்ட தலைக்காய சிகிச்சை பிரிவு, மருந்தகம். தொற்றாநோய் பிரிவு, மருத்துவர் அறை. 2மின்னாக்கிகள், முதல் தளத்தில், அறுவை சிகிச்சைக்கு முன் கவனிப்பு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு பிரிவு, எக்ஸ்ரே, ஆய்வகம், நுண்கதிர், இரண்டாவது தளத்தில். காது, மூக்கு, தொண்டை பிரிவு, பிரசவத்திற்கு பின் கவனிப்பு வார்டு, மருத்துவர் அறை, செவிலியர் அறை, மூன்றாவது தளத்தில், குழந்தைகள் நலப்பிரிவு, பிரசவ அறை, பிரசவத்திற்குப் பிந்தைய பிரிவு, USG Scan அறை, பிரசவத்திற்கு அவரச சிகிச்சை பிரிவு நான்காவது தளத்தில், அறுவை அரங்கம், மயக்கவியியல், செவிலியர் அறை, ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் 140 படுக்கைகள் அதிகரித்து 300 படுக்கை வசதிகள் கொண்ட நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஏற்கனவே ரூ.2.33 கோடி செலவில் சி.டி.ஸ்கேன் கருவி மற்றும் சி.ஆர்ம் கருவிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 400 சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.1 கோடி செலவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.97.90 இலட்சம் மதிப்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.9 இலட்சம் மதிப்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு பிரிவுக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனை NQAS தேசிய தர உறுதி நிர்ணய சான்றிதழ் பெற்ற மருத்துவமனையாகும். மேலும் பிரசவப் பகுதிக்கான தேசிய தரச் சான்றிதழ் LAQSHYA பெற்ற மருத்துவமனையாகும்.தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு. 19 மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும், 6 மாவட்டங்களில் மக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு இணையாக 25 இடங்களில் புதிதாக இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனது. இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.1018.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் அரசு சித்த மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. இந்த சித்த மருத்துவமனை 2 ஆண்டுகாலத்திற்கு பிறகு சித்த மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்தப்படும். மேலும், நாமக்கல் மாவட்ட வட்டார மருத்துவமனை வளாகத்தில் புற நோயாளிகள் வார்டு உருவாக்கி தருவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தொடர்ந்து, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், 3 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் காப்பீட்டு அட்டை மற்றும் 4 பயனாளிகளுக்கு உள் நோயாளிக்கான அனுமதி அட்டை ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகராட்சி நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணைத்தலைவர், தி.கார்த்திகேயன், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி.மகேஸ்வரி. திருச்செங்கோடு அட்மா குழு தலைவர் தங்கவேல், இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு.அ.ராஜ்மோகன், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கி.சாந்தாஅருள்மொழி, மருத்துவ அலுவலர் மரு.எம்.மோகன பானு மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.