370 மாணவர்களுக்கு ரூ.23.13 கோடி கல்விக் கடன்

Update: 2023-11-17 12:44 GMT

ரூ.23.13 கோடி கல்விக் கடன்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தருமபுரி மாவட்டம், வருவான் வடிவேலன் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் உதவிகளை வழங்கினார்.

பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி கல்விக்கடன் வழங்கி பேசும்போது தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களும் பயனடையும் வகையிலும், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றையை தினம் தருமபுரி மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு விருப்பமான உயர் கல்வி பயில வழிவகை ஏற்படுத்தும் வகையில் வருவான் வடிவேலன் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் பிற மாவட்டங்களை ஒப்பிடும் பொழுது கல்விக்கடன் வழங்கப்பட்டு வரும் சதவீதம் மிக குறைந்த அளவில் இருக்கிறது. இதனை அதிகரிக்கும் வகையிலும் பயனடையும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு முன்னெடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகின்றது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரை 11.625 நபர்களுக்கு ரூ.261.90 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்றையை தினம் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் 93 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10.83 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகள் மூலம் 2024 ஆண்டில் இதுநாள் வரை மொத்தம் 370 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.23.13 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டில் 5,000 மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கடனுக்கு தற்போது கல்லூரியில் படித்து வரும் தருமபுரி இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டத்தில் / மாநிலத்தில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், நர்சிங், பரர்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், நன்னடத்தை சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், போன்ற ஆவணங்களை கொடுத்து விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

என ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கோவிந்தசாமி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், சென்னை முதுநிலை நிதி ஆலோசகர் J.வணங்காமுடி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பா.கார்த்திகை வாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன்,

வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி தலைவர் எம்.வடிவேலன், பச்சமுத்து கல்வி குழுமம் தாளாளர் ப.பாஸ்கரன், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் வி.சுமதி, வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News