24 மனை தெலுங்கு செட்டியார் தலைமை சங்க நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: மாநிலத் தலைவர் R.நடராஜன் செட்டியார் பங்கேற்பு..
24 மனை தெலுங்கு செட்டியார் தலைமை சங்க நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்...;
ராசிபுரம் குமரவேல் திருமண மண்டபத்தில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கத்தின் சார்பாக, நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் R.நடராஜன் செட்டியார் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குமரவேல் திருமண மண்டபத்தில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கத்தின் சார்பாக நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட நிர்வாகிகளான நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் T.செல்வம், S.வேலுசாமி, S.A.R.குகன், P.S.ரத்தினம், V.ரவி, V.K.R.K.S.குமரேசன், A.லோகநாதன் ஆகியோரை மாநிலத் தலைவர் சால்வை அணிவித்து நடராஜன் செட்டியார் அறிமுகப்படுத்தி பேசினார். தொடர்ந்து பேசிய அவர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக வழி நடத்த வேண்டும், நம் சமுதாய மக்கள் பல இடங்களில் அரசுக்கு தானமாக பல்வேறு நிலம் ஒதுக்கி உள்ளார்கள், அதேபோல் நாம் அனைவரும் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு வரலாற்றை எடுத்துக் கூறி இன்னும் பல நலத்திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் அளிக்க உதவ வேண்டும் எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் S.சேதுபதி, மாநில பொருளாளர் M.M.கோபி, மாநில துணைத்தலைவர் V.M.மனோகரன், மண்டல செயலாளர் R.சதீஷ்குமார், கல்வி அறக்கட்டளை செயலாளர் கணேஷ் பாபு, கல்வி அறக்கட்டளை பொருளாளர் சக்திராஜா மற்றும் S.மாணிக்கம், K.ராமசாமி, காவடி V.சக்திவேல், T.வசந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.