குட்கா புகையிலை விற்பனை செய்த 249 கடைகளுக்கு சீல்

நடப்பாண்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த 249 கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் தகவல்

Update: 2023-12-14 10:48 GMT

நடப்பாண்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த 249 கடைகளுக்கு சீல் அதிகாரிகள் தகவல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவவர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள், மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் 960 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், 46 கடைகளில் ₹3.35 லட்சம் மதிப்பிலான 329 கிலோ தடை செய்யப்பட்ட நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட 44 கடைகளுக்கு ₹2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்ற 63 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 'வெளி மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்து, பெட்டி கடைகளுக்கு சப்ளைசெய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். நடப்பாண்டில் இதுவரை தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 249 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.
Tags:    

Similar News