திருச்சியில் ஒரே நாளில் 2,500 வழக்குகளுக்கு தீர்வு

திருச்சியில் ஒரே நாளில் 2,500 வழக்குகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டது.

Update: 2024-03-11 08:53 GMT

நீதிமன்றம்

திருச்சி நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனும் உடனடி தீர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான நசீர் வரவேற்று பேசினார்.

நீதிபதிகள் ஜெயசிங், தங்கவேல், நந்தினி, ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, மீனா சந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில நீதிபதி ஜெயப்பிரதா நன்றி கூறினார் முகாம் தொடங்கியவுடன் உடனடி தீர்வு ஏற்பட்டு 4 வழக்குகளில் மட்டுமே, பயனாளிகளுக்கு, ரொக்கம் மற்றும் காசோலைகளை மாவட்ட முதன்மை நீதிபதி கே பாபு, 2 கோடியே 7 லட்சத்து 72 ஆயிரத்து ரூ.787 வழங்கினார்.

இதில் திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட், திருச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் கண்ணன், அரசு வழக்கறிஞர் மோகன், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், சந்தோஷ் குமார் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், பயனாளிகள், வங்கி, காப்பீட்டு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் 2500 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News