2,80,600 கால்நடைகளுக்கு 8-வது (NADCP) சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.;
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 8-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசிப்பணி முதல் 21 நாட்கள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,80,600 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்கு தங்கள் கால்நடைகளை கொண்டு சென்று கோமாரி நோய் தடுப்பூசிபோட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் முன்கூட்டியே தடுப்பூசி போடப்படும் விவரம் தெரியப்படுத்தப்படும்.இத்தடுப்பூசிப்பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 105 தடுப்பூசி பணி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாய பெருமக்கள் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று முதல் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.வீ.பழனிவேல், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.