மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் 3 பேர் கைது
தென்காசி மாவட்டம்,குற்றாலம் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-06-28 08:40 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக தென்காசி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் நிலையில் போலீசார் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இது குறித்து விசாரணை மற்றும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் விசாரணை செய்து கைது செய்தனர். இது குறித்து குற்றால போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.