அனுமதியின்றி பாறை உடைத்த 3 பேர் கைது
சிதறால் அருகே அனுமதியின்றி பாறை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Update: 2023-12-05 04:33 GMT
குமரி மாவட்டம் சிதறால் அருகே உள்ள பள்ளிக்கோணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாக பாறை உடைப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்தை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர்.
அப்போது அங்கு கற்களுடன் நின்ற டெம்போ ஒன்றைம், பாறை உடைக்க பயன்படுத்த கம்ப்ரஸர் வாகன ஒன்றும் கைப்பற்றினர். இது தொடர்பாக சிதறால் பகுதி ரஜினி (42), ராஜகுமார் (43), ராஜு (43) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் சம்ந்தபட்ட நில உரிமையாளர் மற்றும் வாகன உரிமையாளர்களையும் சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.