ஜன.31ல் ஜல்லிக்கட்டு நாள் ஒத்திவைப்பு

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு நடக்கும் நாள் ஜன. 31க்கு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.;

Update: 2026-01-21 17:16 GMT
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு நடக்கும் நாள் ஜன. 31க்கு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் கூறியதாவது: குமாரபாளையம் ஜல்லிக்கட்டு விழா ஜன. 25ம் தேதி வளையக்காரனூர் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அமைச்சர் வருகை, ஜல்லிக்கட்டு இடம் கட்டுமான பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட சில நிர்வாக காரணங்களுக்காக ஜன. 31ல் நடப்பதாக நாள் மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இங்கு திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. லெனின் தலைமையில், பள்ளிபாளையம் டி.எஸ்.பி. கவுதம், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் தவமணி, உள்ளிட்ட , கால்நடை உதவி இயக்குனர், வட்டார போக்குவரத்து அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், தீயணைப்பு ஆய்வாளர், உள்ளிட்ட பல அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஜல்லிக்கட்டு வினோத்குமார், விழா ஏற்பாடுகள் குறித்து கூறினார். விழாக் குழுவினருக்கு அதிகாரிகள் பலரும் ஆலோசனைகளை வழங்கி, ஏற்பாடுகளை துரிதபடுத்த அறிவுரை வழங்கினர். --

Similar News