குமரி மாவட்டம் நான்கு வழிச்சாலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் சாலை ஓரத்தில் தெற்கு மலை அடிவாரம் பகுதியில் ஏராளமான புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் சாலையின் ஓரத்தில் வளர்ந்திருந்த புதரில் தீப்பிடித்து வேகமாக பரவ தொடங்கியது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் புகையின் காரணத்தினாலும் அதிகளவு வெப்பத்தின் காரணத்தினாலும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். உடனடி நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டு அத்தீயினையும் தொடர்ந்து பரவாமல் இருக்கும் விதத்தில் முற்றிலும் அணைத்தனர். நான்கு வழி சாலை ஓரத்தில் தீ பிடித்த பகுதியில் நாகர்கோவில் செல்லும் திசையில் பெட்ரோல் பங்க் இருந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இத்தீயினை அணைத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.