வரி செலுத்தாததால் வளவனூரில் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Update: 2023-12-16 05:35 GMT
குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் வரி செலுத்தாத வீடுகளில் உள்ள குடி நீர் இணைப்புகளை செயல் அலுவலர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் ஊழியர்கள் துண்டித்து வருகிறார்கள். அந்தவகையில் பஞ்சாயத்து போர்டு தெருவில் வரி செலுத்தாததால் 4 வீடுகளின் குடி நீர் இணைப்புகளை பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் துண்டித்தனர். மேலும் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை பொதுமக்கள் விரைந்து கட்ட வேண்டும். இல்லையென்றால் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என செயல் அலுவலர் அண்ணாதுரை எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News