4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குமரியில் கேரளாவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-14 13:32 GMT

குமரியில் கேரளாவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையிலான குழுவினர் நேற்றிரவு வெள்ளிச்சந்தை அருகே பிள்ளை தோப்பு, ராஜாக்கமங்கலம் துறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பிள்ளைத்தோப்பு தேவாலயம் பகுதியில் செல்லும் போது ஆலயத்தின் பின்புறம் சுமார் ஆயிரம் கிலோ பொது விநியோக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கொளச்சல் அருகே உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.    

அதேபோல் நேற்று அதிகாலை தக்கலை மேட்டுக்கடை அருகே  மணலி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த கூண்டு வாகனத்தை நிறுத்த  முற்பட்டனர். ஆனால் அந்த வாகனத்தை டிரைவர் நிறுத்தாமல் சென்று விட்டார். உடனே பறக்கும்படை  அதிகாரிகள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றபோது, வாகனத்தை ஓட்டுனர் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சுமார் 3 டன்  பொது விநியோக ரேஷன் அரிசி மறைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அரிசினையும் மேட்டு உடையார் உள்ள அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.  வாகனம் கல் குல வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

Tags:    

Similar News