50 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார்.
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுக்கு 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன..;
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலிக்காக நூற்றுக்கு மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சுமார் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு ஒன்று தயார் நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.