உசிலம்பட்டியில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்-விவசாயிகள் வேதனை

உசிலம்பட்டியில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-09 02:48 GMT

சேதமடைந்த நெற்பயிர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி, புதுப்பட்டி, கீரிபட்டி, சடச்சிபட்டி, நாட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உசிலம்பட்டி 58 கால்வாய் மூலம் கிடைத்த நீரின் காரணமாகவும், திருமங்கலம் பிரதான கால்வாயில் வரும் நீரின் மூலமாகவும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது நெற்பயிர்கள் விலைந்து அறுவடைக்கு தயாராக உள்ள சூழலில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மழைநீர் வடியும் வரை அறுவடை செய்ய முடியாத நிலையும், மீண்டும் மழை வந்தால் சாய்ந்து கிடக்கும் நெல்மணிகள் மீண்டும் முளைத்து முற்றிலும் சேதமடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.,

Tags:    

Similar News