6 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் ஆட்சியர் ச.உமா வழங்கினார்
Update: 2023-12-15 15:57 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளான குப்புராஜ், வீராசாமி, இராமசாமி, நடராஜ், முருகையா, செல்லப்பா என 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4,41,100/- மதிப்பில் செயற்கை கால்களை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.