கோயில் உண்டியல் திறப்பு ரூபாய் 7.4 லட்சம் காணிக்கை!
கொன்னையூர் முத் துமாரியம்மன் கோயிலில் காணிக்கையாக 7 லட்சத்து 45 ஆயிரத்து 266 ரொக்கத்தை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
Update: 2024-05-09 06:08 GMT
பொன்னமராவதி: கொன்னையூர் முத் துமாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் பங்குனி பொங்கல் விழா மற்றும் நாடு செலுத்துதல் திருவிழா நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். திருவிழா நிறைவு பெற்ற நிலையில் கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.
இந்துசமய அறநிலையத் துறை தஞ்சாவூர் உதவி ஆணையர் கவிதாதலைமையில் கோயில் செயல் அலுவலர் ஜெயா, ஆய்வாளர் லாவண்யா ஆகியோர் முன்னிலையில் காணிக்கை கணக்கிடப் பட்டது. இதில் 7 லட்சத்து 45 ஆயிரத்து 266 ரொக்கத்தை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். இந்த பணியில் கோயில் பணியாளர்கள், ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிறுவன ஊழியர்கள்,விஜயா வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.