75 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது                     

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆழியூரில் மருகை கடையில் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்து 2 பேர் கைது  செய்யப்பட்டனர்.

Update: 2024-07-05 13:02 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆழியூரில் மருகை கடையில் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்து 2 பேர் கைது  செய்யப்பட்டனர்.


 நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆழியூரில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு  தகவல் வந்தது. இதையடுத்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார்  ஆழியூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் மளிகை பொருட்கள் வைத்திருந்த குடோன் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் .

அப்போது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 4 மூட்டைகளில் இருந்த 75 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து மளிகை கடை நடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி அருகே உள்ள அம்மாப்பட்டினத்தை சேர்ந்த கலந்தர் நைனா முகம்மது (வயது 34), செய்யது முகம்மது புகாரி (42) என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.  இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கலந்தர் நைனா முகம்மது, செய்யது முகம்மது புகாரி இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 75 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News