குமரியில் 75 சதவீத பஸ்கள் இயங்கின

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்றவேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், குமரியில் 75 சதவீத பஸ்கள் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-09 05:42 GMT

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்றவேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், குமரியில் 75 சதவீத பஸ்கள் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்கங்களில் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று முதல்  காலவரையற்றவேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.      குமரி மாவட்டத்தில் ராணி தோட்டம் 1, 2, 3 மற்றும்  , மார்த்தாண்டம்  உட்பட 12 போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இவற்றில் டவுன் பஸ்களின் எண்ணிக்கை 400 ஆகும். வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு சுமார் 800 பஸ்கள் இயங்கி வருகிறது.       இந்த பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதற்காக தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.       இன்று காலை முதலே மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பஸ்கள் இயங்கத் தொடங்கின. சுமார் 75 சதவீத பஸ்கள் இயங்கி வருவதாக அறிவிப்பு  வெளியாகி உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் வழக்கம் போல் இயங்கின.
Tags:    

Similar News