750 கல்லூரி மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்பித்த எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்“ என்ற மகாகவி பாரதியாரின் வரிகள் நிறைவேறியுள்ளது- பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் 750 கல்லூரி மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேச்சு.;
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாவட்ட ஆட்சியர் தலைமையில்,மேயர் து.கலாநிதி முன்னிலையில் 750 மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், அரசு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் சட்டக் கல்லூரிய அரங்கில் நடைபெற்ற விழாவில் அரசு கல்லூரி மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 3201 மாணாக்கர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 1154 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் 750 மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இதில் தமிழ்த்துறை-87, ஆங்கிலத் துறை -55, வரலாறு துறை -67, பொருளாதாரத் துறை -68, வணிகவியல் துறை -55, கணித துறை -51, இயற்பியல்-84, வேதியியல் துறை -62, தாவரவியல் துறை -50, விலங்கியல் துறை -31, கணினி அறிவியல் துறை -70, நுண்ணுயிரியல் துறை -41, ஊட்டச்சத்து மற்றும் கட்டுப்பட்டியல் துறை -29 என மொத்தம் 750 மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.அரங்கம் முழுவதும் பெண்களே நிறைந்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் பொழுது பெண் உரிமை, பெண் விடுதலை, பெண் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட மகாகவி பாரதி நம்முடன் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பெண்களும் சமுதாயத்தில் சமநிலை பெற வேண்டும், அனைவரும் கல்வி கற்க வேண்டும், பணிக்கு செல்ல வேண்டும், “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்“ என்று மகாகவி பாரதியார் பாடினார். அவை அனைத்தும் இன்று நிறைவேறியுள்ளது. அனைவரும் புதுமைப் பெண்களாக உள்ளனர். அதனால் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்லூரியில் பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு புதுமைப் பெண் திட்டம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.அதேபோல மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் அனைவரும் இத்தொகையினை நல்வழியில் பயன்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினி என்பது பரிசு பொருள் அல்ல, அது அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு செய்கின்ற முதலீடு என்று தெரிவித்துள்ளார். மேலும் மடிக்கணினி கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக வழங்கப்படுகிறது. அதேபோல் தான் முதலமைச்சரின் காலை உணவு திட்டமும் ஆகும். மாணவர்கள் மடிக்கணினியினை அறிவு வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளில் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி, துறைத்தலைவர் (ம) இணைப்பேராசிரியர்கள் வி.எமீமாள் நவஜோதி (கணிதத்துறை), முதுமுனைவர் க.சர்மிளா பானு (விலங்கியல் துறை) உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.