78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறகுகள் அறக்கட்டளை நடத்திய ஐந்தாம் ஆண்டு குருதி கொடை விழா .

78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறகுகள் அறக்கட்டளை நடத்திய ஐந்தாம் ஆண்டு குருதி கொடை விழா..

Update: 2024-08-15 13:16 GMT
78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறகுகள் அறக்கட்டளை நடத்திய ஐந்தாம் ஆண்டு குருதி கொடை விழா 15.8 .24 சுகந்திர தினத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவர் s.தயாசங்கர் வட்டார மருத்துவ அலுவலர், மற்றும் ஐ சி டி சி ஆலோசகர் A.அன்புச்செல்வி மற்றும் இராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கி மையம் ‌, இராசிபுரம் மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்கள் உடன் இணைந்து சிறகுகள் அறக்கட்டளை சார்பாக நண்பர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 100 யூனிட் குருதி கொடை அளித்தனர் . இரத்ததானத்தை சிறப்பாக நடத்தியதற்காக சிறகுகள் அறக்கட்டளைக்கு நற்சான்று வழங்கப்பட்டது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் இதுபோன்ற சேவையை செய்து வருவதை அனைவரும் பாராட்டினர்.

Similar News