பேரூராட்சி சுகாதாரப்பணிக்கு ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் 8 பேட்டரி வாகனங்கள்
தரங்கம்பாடி பேரூராட்சி சுகாதாரப்பணிக்கு ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் 8 புதிய பேட்டரி வாகனங்களை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
Update: 2023-12-21 11:47 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி, தூய்மை பேரூராட்சிக்கான விருதினை ஏற்கனவே பெற்றுள்ளது. இந்நிலையில் இப்பரூராட்சிக்கு உட்பட்ட, பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக ,கூடுதலாக பேட்டரி வாகனம் வாங்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ முயற்சியால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24-ன்கீழ் ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பயன்பாட்டுக்காக 8 புதிய பேட்டரி வாகனம் வாங்கப்பட்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு , திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்து கொடியசைத்து பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், துணைத்தலைவர் பொன்.ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.