மயிலாடுதுறையில் 85 சதவிகித பேருந்துகள் இயக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 137 பேருந்துகளில் தற்போது வரை 85 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு போக்குவரத்து பணிமனை கழகங்களிலும் நகரப் பேருந்து, புறநகரப் பேருந்து என 137 அரசு பேருந்துகள் உள்ளன. இதில், மயிலாடுதுறையில் 70 பேருந்துகளும், சீர்காழியில் 41 பேருந்துகளும், பொறையாரில் 26 பேருந்துகளும் உள்ளன. இதில் மயிலாடுதுறை பணிமனையில் இருந்து இயக்கப்படும் 70 பேருந்துகளில் தற்போது காலை 7 மணிவரை செல்லவேண்டிய 69 பேருந்துகளில் 50 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், பொறையார், சீர்காழி பணிமனையில் உள்ள பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. சராசரியாக 90 சதவீத பேருந்துகள் இயக்கபட்டு உள்ளது. மேலும் ஆனைத்து பேருந்துகளும் இயக்கபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.